சூடான செய்திகள் 1

லங்கா சஜித் பெரேராவுக்கு பிணை

(UTV|COLOMBO) பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட லங்கா சஜித் பெரேரா நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீர்க்கொழும்பு பிரதான நீதவான் ரஜிந்த்ரா ஜயசூரிய முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் நபரொருவரை கத்தியை காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு தொடர்பில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாளை அங்கு முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் இருந்த இருவர் கைது

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்