விளையாட்டு

ரோயல் செலேன்ஜர்ஸ் தொடர்ந்தும் முன்னிலையில்

(UTV | இந்தியா) – இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலேன்ஜர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலேன்ஜர்ஸ் பெங்களுர் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ரோயல் செலேன்ஜர்ஸ் பெங்களூர் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 181 ஓட்டங்களைப் பெற்று இலக்கைக் கடந்தது.

அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி (Virat Kohli) 72 ஓட்டங்களையும், தேவ்டட் படிக்கல் (Devdutt Padikkal) 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 101 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ரோயல் செலேன்ஜர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்டட் படிக்கல் (Devdutt Padikkal) தெரிவு செய்யப்பட்டார்.

இதுவரை தாம் சந்தித்த 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவாது தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவரும் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எம்.பி. பதவி சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிய சச்சின்

இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றி!

LPL தொடரிலிருந்து விலகியதற்கான காரணம்