வகைப்படுத்தப்படாத

ரொராண்டோ மாநகரசபை – யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் உடன்படிக்கை

(UDHAYAM, COLOMBO) – கனடாவின் ரொராண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில்அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலககேட்போர் கூடத்தில் நேற்று  இடம்பெற்றது. ரொராண்டோ மாநகர சபையின் மேயர் JohnTory, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் கீழ் யாழ் மாவட்ட காணி அபிவிருத்தி ,கல்வி மேம்பாடு ,சுகாதார வசதி உள்ளிட்டவற்றுக்கு தொழில்நுட்ப உதவி ,நிதி உதவி வழங்குவதற்கு ரொராண்டோ மாநகர சபை முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்

Coach disappointed with World Cup performance

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்