வகைப்படுத்தப்படாத

ரொபட் முகாபேயின் 37 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது

(UTV|ZIBABWE) -சிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து அந்தநாட்டு ஜனாதிபதியாக இருக்கும் ரொபர்ட் முகாபே, தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார்.

இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாற வேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது என முகாபே அக் கடிதத்தில் கூறியுள்ளதாக, வெ ளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. முகாபேவுக்கு எதிராக குற்றச்சாட்டு தீர்மானம் கொண்டு வருவதற்காக, கூட்டு பாராளுமன்றத்தில் விவாதம் தொடங்கிய நிலையில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வந்துள்ளது.

இதனால், முகாபேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பதவி நீக்க நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, பதவியில் இருந்து விலக முகாபே மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

தனி அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார்

பெரகல பிரதேசத்தில் மண் சரிவு

ஆங் சான் சூகி இராஜினாமா செய்ய வேண்டும்