விளையாட்டு

ரொஜர் பெடரர் விலகல்

(UTV | கொழும்பு) – டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பகிரங்க டென்னஸ் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

தாம் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும், இதனால், பல மாதங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்படும் என்றும் ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஆறு தடவைகள் மாத்திரம் விளையாடிய நிலையில், அவரது இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு 13 போட்டிகளில் ரொஜர் பெடரர் விளையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 541 ஓட்டங்கள்

இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்த ஏஞ்சலோ!!

சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி ஓய்வு?