உள்நாடு

ரேஷன் முறையில் எரிபொருளை வழங்க யோசனை

(UTV | கொழும்பு) –   எதிர்காலத்தில் போக்குவரத்து மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் ரேஷன் முறையை (Ration System) அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து எரிபொருள் பாவனையாளர்களையும் தமது பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக தனியார் பஸ்களுக்கான டீசல் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள ஒவ்வொரு எரிபொருள் களஞ்சியசாலைக்கும் தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

உருமாறிய கொரோனா : 02 முகக்கவசங்களை பயன்படுத்தவும்

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

தாதியர் சங்கத்தினால் அரசுக்கு காலக்கெடு