விளையாட்டு

ரொனால்டோ மீளவும் களத்தில்

(UTV | போர்த்துக்கல்) – கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்துள்ள உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

போர்த்துக்கல் கால்பந்து அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் போட்டியில் இத்தாலியின் யுவன்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

அண்மையில் இவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட இவர், பார்சிலோனாவுடன் சாம்பியன்ஸ் லீக் மோதல் உட்பட பல போட்டிகளில் மோதவில்லை.

அண்மையில் ரொனால்டோவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் குணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந் நிலையிலேயே அவர் நேற்று ஸ்பெசியா அணியுடனான போட்டியில் யுவன்டஸ் அணிக்காக களமிறங்கி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் யுவன்டஸ் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அணி சார்பில் ரொனால்டோ இரண்டாவது மற்றும் மூன்றாவது கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் போன பிரபல அணியினர்

இலங்கைக்கான வெற்றி இலக்கு