சூடான செய்திகள் 1

ரெயில்வே வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-வேதனம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த தொடருந்து இயந்திர பொறியியலாளர்களின் போராட்டம் இன்று மதியம் 12 மணி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க, தொடருந்து இயந்திர பொறியலாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

எனினும், தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு விடுத்து கோரிக்கைக்கு அமைய, இந்த போராட்டத்தை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மின்சார சபையின் பொறியியலாளர்கள் நேற்று பிற்பகல் முதல் ஆரம்பமான வரையறைக்குள் தொழிற்படும் போராட்டத்தை கைவிடுமாறு, மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய கோரிக்கை விடுத்துள்ளார்.

குறைந்த செலவில் மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்காக பொறியியலாளர்கள் முன்வைத்த திட்டம் இன்னும் அனுமதிக்கப்படாமைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் இது தொடர்பான கலப்பு மின்னுற்பத்தி திட்டம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கொலை வழக்கு- வாஸ் குணவர்த்தனவின் மனு ஒத்திவைப்பு

ரணில் – சஜித் இடையில் நாளை முக்கிய சந்திப்பு

மஸ்கின் ஸ்டார் லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி!