உள்நாடு

ரூ.5,000 கொடுப்பனவு வழங்கும் சேவையிலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகல்

(UTV|கொவிட் – 19) – நாடளாவிய ரீதியில் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமக்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் இல்லாதமையால் குறித்த இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நிலவும் சிக்கல்கள் குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு, அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாகவும், தமது பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தப்படாத காரணத்தினால் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் சேவையிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

 நீர் விநியோகம் தடைப்படலாம்

சிவனொளிபாத மலையில் 150 இளைஞர்கள் கைது

இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் பால் இறக்குமதி செய்வதில் கவனம்