உள்நாடு

ரூ.5,000 கொடுப்பனவு பெறத் தகுதியுடையோர்

(UTV | கொழும்பு) – கொவிட்- 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகையாக 5,000 ரூபா வழங்கும் நடவடிக்கையானது இன்று(02) ஆரம்பமாகவுள்ளது.

இந்த திட்டத்திற்காக 30 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட இருக்கும் 5000 ரூபாய்கள் உதவித் தொகையினைப் பெற தகுதியுடையோர்கள் விபரம் வருமாறு:

1.நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்கள்.

2. சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.

3. சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்.

4. 70 வயதினைக் கடந்த மூத்தவர்கள்.

5. 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவிற்கான முத்திரையினைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.

6. மாற்றுத் திறனாளிகள்.

7. இதுவரை கொடுப்பனவினைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள்.

8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும்.

9. சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர்கள்.

10. ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர்அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனவினைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் – அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட பெறுவனவினைகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறுவதற்கு தகுதி உடையவராவார்.

11. இந்த உதவி தொகையினை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்கள் ஊடாக மக்கள் பெற முடியும்.

அதேநேரம் உதவித் தொகையினை பெற தகுதியான குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட கிராமப்புறக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையினை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எனவே, இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவினை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

ஹட்டன் விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக பலி

நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் உண்மையை மைத்திரி பகிரங்கப்படுத்த வேண்டும்

‘பொருளாதாரம் தெரியாத மூவரால் நாடு அழிந்தது’