உள்நாடு

ரூ.2,000 கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

(UTV | கொழும்பு) –    தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதரத்தை இழந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும், இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் பிரதேச செயலகத்துக்கு மேன்முறையீடு செய்யமுடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக குறித்த மேன்முறையீடை முன்வைக்க முடியும் என அவ்வமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

நிவாரணக் கொடுப்பனவைபெற தகுதிபெற்றவர்களில் சுமார் 50% மானோருக்கு 2,000 ரூபா கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் சனி, ஞாயிறு தினங்களில் திறப்பு

முட்டை விலை குறையும்