கிசு கிசு

ராணி 2-ம் எலிசபெத்திற்கு 10-வது கொள்ளுப்பேரன்

(UTV | இங்கிலாந்து) – இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என பெயரிடப்பட்டுள்ளது.

இது இளவரசி சாரா டின்டால் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக் டின்டால் தம்பதியின் 3-வது குழந்தையாகும். ஏற்கனவே இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இளவரசி சாரா டின்டால் அரண்மனையின் குளியலறையில் இருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் குளியல் அறையிலேயே அவர் குழந்தை பெற்றெடுத்ததாகவும் மைக் டின்டால் கூறினார்.

லூகாஸ் பிலிப் டின்டால், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் நடிகை?

கொரோனா நோயாளிகளின் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் : GMOA எச்சரிக்கை

MV XPress Pearl அழிவுக்கு காரணம் இதுதான்