சூடான செய்திகள் 1

ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14 ஆயிரம் கையொப்பங்கள்

(UTV|COLOMBO)-முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14 ஆயிரம் கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.

ஜனாதிபதி செயலாளர் ஊடாக நேற்றைய தினம் குறித்த ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சராக ராஜித சேனாரட்ன செயற்பட்டபோது பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகள் முன்னெடுப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தபால் மூல வாக்களிப்பு இன்று

களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க கொங்கிரீட்டு அணைக்கட்டுகள்

பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்