விளையாட்டு

ராஜஸ்தானும் தலைமையை மாற்றுகிறது

(UTV | துபாய்) – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைவராக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று.

அந்த அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே வருகின்ற நிலையில் குறித்த அணியின் தலைவர் ஸ்மித்தின் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது அவரிடம் இருந்து தலைமையை பிடுங்கி அந்த அணியின் ஜோஸ் பட்லர் வசம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர ஏற்கனவே கொல்கத்தா அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக்கு பதிலாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

வீழ்ந்தது நியூசிலாந்து, கிண்ணம் ஆஸிக்கு

நாளை காலியில் இந்திய – இலங்கை மகளிர் கிரிக்கெட் போட்டி