வணிகம்

ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கைக்கு அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பேர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள, இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் அலக்ஷாண்டர் கர்சாவா இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பல பிராந்தியங்களை உள்ளடக்கியதாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதில் இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி விடயங்களை காட்சிப் படுத்த முடியும் என்று ரஷ்யத்தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக இலங்கைக்கு பல புதிய வர்த்தக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

AG GLASS வடிவமைப்பு உடன் கூடிய மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் முன்னணி EYE AUTOFOCUS அம்சத்துடன் சந்தைக்கு வரவுள்ள VIVO V20

கணினி மயப்படுத்தப்படவுள்ள கொழும்பு மாநகர சபை

சீனி உப்புக்கான வரிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்