உள்நாடு

ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஏப்ரல் மாத இறுதிக்குள்

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை இந்த மாத இறுதிக்குள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக நாட்டுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், 350,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இரண்டாவது செலுத்துகைக்காக கையிருப்பில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.

அக்கினிச் சுவாலையில் இருந்து மீண்ட உடல்களை அடக்கம் செய்யும் முறை [VIDEO]