உள்நாடு

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்

(UTV|COLOMBO) – ரயில்வே பாதுகாப்பு சேவையில் 180 புதிய அதிகாரிகளை இணைத்துக் கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று(29) இடம்பெற்ற எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என, ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சையில் சுமார் 19,000 பேர் தோற்றியுள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு சேவையில் 253 வெற்றிடங்கள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்