உள்நாடு

ரயில்வே ஊழியர்களிடையே வலுக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் இலங்கை ரயில்வே கடுமையான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்கள், கொவிட்-19 பரவுவதைத் தணிக்கவும் தடுக்கவும் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், ரயில்வே அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் வைரஸ் பரவுவது வேகமாக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில் ரயில்வே அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், ஏராளமான ஊழியர்கள் கொரோனா வைரஸால் பதிப்படையக் கூடும். மேலும் இது பயணிகளையும் அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் இலங்கை ரயில்வே தொழிற் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

Related posts

டொலரின் விலை வீழ்ச்சி !

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக எமது பயணம் அமையும்