வகைப்படுத்தப்படாத

ரயில் விபத்து – பலியானோரின் எண்ணிக்கை உயர்வு

(UTV|DENMARK)-டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக நேற்று முன்தினம் ஒரு பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது.
கிரேட் பெல்ட் பிரிட்ஜ் என்னும் பாலத்தின் மீது வந்தபோது அந்த பயணிகள் ரயில் மீது பக்கவாட்டில் சென்ற ஒரு சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயமடைந்த 16 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் எனவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து மேலும் 2 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டனர். இதையடுத்து, ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

More rain in Sri Lanka likely

இலஞ்சம் கோரிய மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதியும் கைது

போதையில் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடுமை