சூடான செய்திகள் 1

ரயில் தொழிற்சங்கம் – மஹிந்த தேசப்பிரிய சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கம் அதனை கைவிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தமது கோரிக்கைகளுக்கு பதிலை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் இன்றைய தினம்(07) கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இன்று திறப்பு

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு