சூடான செய்திகள் 1

ரயில் சேவை தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி நேற்றிரவு வெளியிடப்பட்டது.

ரயில் சேவைகளை வினைத்திறனுடன் தடையற்ற முறையில் நடத்திச் செல்வதற்கு அவசியமான புகையிரதப் போக்குவரத்து, புகையிரதங்கள் மற்றும் புகையிரதப் பாதைகளின் பராமரிப்பு மற்றும் உரிய பாதுகாப்பு வசதிகளை வழஙகுவதற்குத் தேவையான உரிய சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும் வழிநடத்தல்கள், நுழைவுச்சீட்டுக்களை வழங்குதல் உட்பட புகையிரதத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த விதமான அனைத்துச் சேவைகளைக்கொண்டு நடத்தத் தேவையான சகல பணிகளையும; மற்றும் எந்தவிதமான உடலுழைப்புகளையும் வழஙகுதல் முக்கிமானது என குறித்த  வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கம் தற்போது பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற குழப்ப நிலை-இன்று(27) குழு மீண்டும் கூடுகிறது

எதிர்வரும் 05ம் திகதி முதலாம் தவணை விடுமுறை

அடையாள வேலை நிறுத்தத்தில் புகையிரத தொழிற்சங்கம்?