உள்நாடு

ரம்புக்கனை சம்பவம் : பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு

(UTV | கொழும்பு) – ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்தும் போது பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை எஸ்.எஸ்.பி மற்றும் கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை இன்று காலை 11 மணிக்கு தமது தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இரண்டு பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர், சட்ட அதிகாரி மற்றும் மனித உரிமை அதிகாரி உள்ளிட்ட விசேட குழுவொன்று ஏற்கனவே ரம்புக்கனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மகாநாயக்கர்களின் யோசனை குறித்து ஜனாதிபதி கடிதம்

தடுப்பூசிக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கலந்து கொள்ளும் THE BATTLE