உள்நாடு

ரமழானை வரவேற்க முதல் அடியை எடுத்து வைக்கும் யூ.டீ.வி இனது கிராத் முறத்தல் போட்டி நாளை முதல்

(UTV | கொழும்பு) – 2021 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு யூ டி வீ ஏற்பாடு செய்துள்ள மாபெரும் அல் குர் ஆன் முறத்தல் போட்டி நாளை முதல் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் கொழும்பில் உள்ள பல அல் குர் ஆன் மத்ரஸாக்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களின் இனிமையான அல்குர் ஆன் முறத்தலை புனித ரமழான் மாதம் முழுவதும் ஒவ்வொரு மணித்தியாலத்தில் 55 ஆவது நிமிடத்தில் ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

அத்தோடு குறித்த போட்டியாளர்களின் வெற்றி விபரங்களை ரமழான் மாத இறுதி பகுதியில் அறிவிக்கவுள்ளோதோடு வெற்றி பெறுகின்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வையும் பிரமாண்டமாக நடத்த யூ டி உத்தேசித்துள்ளது.

Related posts

இன்று உருவாகவுள்ள நிசர்கா

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903