வகைப்படுத்தப்படாத

ரணில் வெளியிட்டுள்ள சொத்து விபரங்களை மக்கள் நம்பமாட்டார்கள்

ஜனாதிபதியானதும் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் குறித்து முதலில் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சொத்துக்கள் குறித்த விபரங்களை நேர்மையான விதத்தில் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது சொத்துக்கள் குறித்து வெளியிட்டுள்ள விபரங்களை பொதுமக்கள் நம்பமாட்டார்கள் என செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வெளியிட்டுள்ள சொத்து விபரங்களை விட குறைவான சொத்து விபரங்களை ஜனாதிபதி காண்பித்துள்ளாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சொத்துக்களை விட குறைவான சொத்துக்களை ஜனாதிபதி காண்பித்துள்ளதை மக்கள் நம்புவார்கள் என நீங்கள் நம்புகின்றீர்களா? ரணில் இங்கும் ஏமாற்றியுள்ளார் ஜனாதிபதியானதும் முதல் வேலையாக அனுரகுமார திசநாயக்க ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட சொத்து விபரங்கள் சரியானவையா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சுனில் ஹந்து நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

FCID scans Batticaloa campus funding

Cabinet opposes implementing death penalty