அரசியல்உள்நாடு

ரணில் தனது தீர்மானத்தை இப்போதே அறிவிக்க வேண்டும்- நாமலின் கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்பது தொடர்பில் இப்போதே தீர்மானம் ஒன்றை மேற்கொண்டால், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் தமது கட்சிக்கும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த ஆண்டில் முதலாவதாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்திருந்தாலும் கூட, ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த நாமல்,

“தற்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ரணில் விக்கிரசிங்கவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தால் அமைச்சரவையிலிருந்து இரு வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் அது தொடர்பில் தமது கட்சி நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் .“ என தெரிவித்தார்

இவ்வாண்டில், முதலில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அது தொடர்பில் தயாராவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

Related posts

இதுவரை 1633 பேர் கைது

இரணைதீவு : சுகாதார திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கவில்லை

நாடு முழுவதும் 10,000 போலி வைத்தியர்கள் கண்டுபிடிப்பு