அரசியல்உள்நாடு

ரணில், சஜித்தை இணைக்க முயற்சியா ? மறுக்கின்றார் முஜிபூர் ரஹ்மான் எம்.பி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் அரசியல் இணக்கப்பாடொன்று ஏறபடலாம் என தெரிவிக்கப்படுவதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் நிராகரித்துள்ளார்.

சிலர் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் இணக்கப்பாடு ஏற்படப்போகின்றது என தெரிவிக்கின்றனர் இது உண்மைக்கு புறம்பான விடயம், எங்கள் வேட்பாளர் முன்னிணியில் உள்ளதால் அதற்கான தேவை எதுவும் இல்லை  என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது தோற்றத்தை கூடமாற்றிக்கொள்ளவேண்டிய அளவிற்கு சிலரின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளார். அவர் விதம்விதமான சேர்ட்களை அணிகின்றார் என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Related posts

 மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு.

வீதி விபத்தில் மூவர் பலி