அரசியல்உள்நாடு

ரணிலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன் – தோழராக இருக்கும் எனது அருமை அவருக்குப் புரியும் – அநுர

‘‘மத்திய வங்கி மோசடி தொடர்பில் நிச்சயமாக விசார ணைகளை முன்னெடுப்பேன். அதனூடாக ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன்’’ என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

ஆனமடுவவில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாகத் தோல்வியடைவார். அவருக்கு கிராமங்களில் வாக்கு இல்லை.

ரணிலின் போலி பேச்சுகளில் நாங்கள் சிக்கிக்கொள்ள மாட்டோம். மத்திய வங்கி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்டு ரணிலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன்.

காணி மோசடி, மதுபானசாலை அனுமதி வழங்கியமை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுமதி வழங்கியமை தொடர்பிலும் விசாரணை செய்வேன். அப்போதே அவரின் தோழராக இருக்கும் எனது அருமை அவருக்குப் புரியும்.

பொதுமக்களின் பணம் இலட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களுக்காக பல இலட்சம் செலவுசெய்யப்பட்டுள்ளது. ரணிலின் கேள்விக்குப் பதிலளிக்க நான் தயாராக இல்லை. அவர் எனது கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அவர் பெரும் மன அழுத்தத்தில் இருக்கிறார்.

அதற்குக் காரணம், அவருக்கு பின்னர் அரசியலுக்கு வந்தவர்கள் சகலரும் ஜனாதிபதியாக இருந்துள்ளார்கள். ஆனால், அவரால் ஜனாதிபதி பதவியை வகிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.

Related posts

CID அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது!

அரசாங்கம் சைவர்களின் கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது – ஆறுதிருமுருகன்.

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!