உள்நாடு

‘ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இல்லை’ – SLPP

(UTV | கொழும்பு) – ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் தற்போது அந்தப் பதவியை வகித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு தமது கட்சியில் உள்ள எவருக்கும் மூளை கசக்கவில்லை என தாம் நினைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

நாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்

கடந்த 24 மணிநேரத்தில் 396 பேர் கைது

அரசியல் வாதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் – அநுர

editor