உள்நாடு

ரணிலுக்கு எதிரான மனு பரிசீலனைக்கு திகதி நியமனம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலிக்க அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(28) உத்தரவிட்டது.

நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, லபார் தாஹிர் மற்றும் டி. எம். சமரக்கோன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை மார்ச் 30-ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டனர்.

கடந்த அரசாங்கத்தின் போது ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு செயலகம் தொடர்பான பல செயற்பாடுகளுக்கு தாம் பொறுப்பு என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தமக்கு எதிராக பல பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமராக இருந்த போது ஊழல் ஒழிப்பு செயலகம் தனக்கு கீழ் இயங்கவில்லை எனவும் அதன் செயற்பாடுகளில் தான் தலையிடவில்லை எனவும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரதத்தில் மோதுண்ட நபர் ஸ்தலத்தில் பலி!

இன்று நள்ளிரவு முதல் விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இராகலை தோட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரை [VIDEO]