அரசியல்உள்நாடு

ரணிலுக்கு ஆதரவு வழங்கிய குழு யானை ? சிலிண்டர் ?

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலோ அல்லது வேறு பொதுச் சின்னத்திலோ போட்டியிடத் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு சிலிண்டர் சின்னத்தை பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணைக் குழுவிடம் வினவியுள்ளதாகவும், அதன் முடிவு கிடைத்ததும் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

எரிவாயு சிலிண்டர் சின்னத்தைப் பெற முடியாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் யானை அல்லது வேறு சின்னத்தின் கீழ் போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவு

editor

கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!