அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலின் விசேட கலந்துரையாடல் – மைத்திரி பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார்.

மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில, நிமல் லன்சா, ராஜித சேனாரத்ன, ருவன் விஜேவர்தன, சாகல ரத்நாயக்க மற்றும் மேலும் பலர் இணைந்துக்கொண்டுள்ளனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன,

“பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தது. ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் வரவில்லை. எதிர்காலத்தில் அவர்களும் கலந்துரையாடலில் இணைவார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவதா அல்லது தனித்தனியாகப் போட்டியிடுவதா என்பதை விரைவில் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.”

நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா,

“விசேட கலந்துரையாடல் எதுவும் இல்லை. இது ஒரு நட்புரீதியான சந்திப்பு. முன்னாள் ஜனாதிபதி எங்களை வரச் சொன்னார், அதனால் நாங்கள் வந்தோம்.”

Related posts

ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

மாணவர்களின் போஷாக்கு குறைப்பாட்டை நீக்க நடவடிக்கை

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ கைது

editor