கிசு கிசு

ரணிலின் அழைப்பினை மறுக்கும் சஜித்

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, நேற்று (22) அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பையும் நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரிகள் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற முறைமையின் கீழ் எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு சாதகமான செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சுப் பதவிகள் நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளதாகவும் அமைச்சுப் பதவிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரஞ்சனுக்காக ​எம்.பி பதவியை துறக்கும் ஹரின்

சிறந்த குடிமகன் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரை

சங்காவின் மனைவியை தவறாக பேசிய இந்திய வீரர்