அரசியல்உள்நாடு

ரஞ்சன் வேட்புமனு விவகாரம் – மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்று, பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி!

மேலும் 03 பேர் பூரணமாக குணம்

பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் – FUTA