அரசியல்உள்நாடு

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி மனு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பின் ஊடாக வேட்மனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்றில் அமரவும், வாக்களிக்கவும் உரிமை இல்லை என தீர்ப்பளிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளரான கே.எம்.மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவு

ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கலைக்கப்பட்ட இடைக்கால குழு!