கிசு கிசு

ரஞ்சனின் வெற்றிடத்திற்கு அஜித் மன்னப்பெரும

(UTV | கொழும்பு) –    நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், அப்பதவியை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

விருப்பு வாக்குப் பட்டியலில் அவருக்கு அடுத்தப்படியாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவே இருக்கின்றார்.

ஆகையால், ரஞ்சனின் வெற்றிடத்துக்கு அஜித் மன்னப்பெருமவே நியமிக்கப்படுவார் என​ தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்து?

மகளை சுட்ட இலங்கையர் தானும் தற்கொலை செய்ய முயற்சி

வைத்தியர் ஷாபி கருத்தடை செய்ததாக கூறப்பட்ட பெண்களுக்கு குழந்தை பாக்கியம்