அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, நேற்று முன்தினம் (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய, அவரை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

வெளிநாட்டவர்களின் சடலங்களுடன் திருமலை துறைமுகத்தில் கப்பல்

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது