உள்நாடு

யூரியா உர இறக்குமதிக்கான விலைமனு கோரல் யோசனை அமைச்சரவைக்கு

(UTV | கொழும்பு) – பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்குரிய விலைமனு கோரல் தொடர்பான யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விலை மனுக்கள் தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் குறித்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) கூடவுள்ள மேன்முறையீட்டு விசாரணை குழுவின் கூட்டத்தின் போது, தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இதனிடையே, உலக வங்கியின் கடன் வசதிகளின் கீழ் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள யூரியா உரத்திற்கான விலைமனு கோரல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் விசேட கலந்துரையாடலை நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யூரியா உர இறக்குமதியில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில், அவற்றை அடையாளம் கண்டு விவசாய துறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கான கருத்துகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள விவசாய அமைச்சில் இன்று(11) முற்பகல் இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

Related posts

Breaking News : இளம் முஸ்லிம் வர்த்தகர் கொலை : கொழும்பில் சற்றுமுன் சம்பவம்

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

பஸ் கட்டணம் குறைக்கப்படாது