சூடான செய்திகள் 1

யுவதியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

(UTV|COLOMBO)-வீடொன்றில் தனிமையில் இருந்த விஷேட தேவையுடைய 20 வயதான யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனை கைது செய்துள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆணமடுவ, தோனிகல பகுதியை சேர்ந்த 31 வயதுடைய திருமணம் ஆகத ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது தாயுடன் வசித்து வருவதுடன் தாய் கூலி வேளைகளுக்கு செல்லும் போது அவர் தனியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தனிமையில் இருந்த சந்தர்க்கத்தில் சந்தேகநபர் குறித்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த யுவதியின் தாய் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.

குறித்த யுவதியை மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆணமடுவ வைத்தியசாலையிர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆணமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

24 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்