வகைப்படுத்தப்படாத

யுக்ரேனிய கடற்படை கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்

(UTV|RUSSIA)-க்ரைமியா தீபகற்ப பகுதியில் மூன்று யுக்ரேனிய கடற்படை கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா, குறித்த கப்பல்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயமானது இரு நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலைமையை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டு பீரங்கி கப்பல்கள் உட்பட மூன்று கப்பல்களை ரஷ்ய படையினர் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், குறித்த மோதலில் யுக்ரேனிய குழுவினர் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பொலன்னறுவையில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலி

මදුරු කීටයන් බෝ වන ස්ථානවල නම් ප්‍රසිද්ධ කර නීතිමය පියවර

கொரிய நாட்டவர் கைது