அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குழாம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பிமல் ரத்னாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (30) விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

விமான நிலையத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும், அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் விமான நிலைய அதிகாரிகள், தொழிநு ட்பவியலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர்.

குறித்த அமைச்சர் குழாமில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்டோர் உள்ளடங்கி இருந்தனர்.

Related posts

மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த தினேஸ் தீவிர முயற்சி

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

கொழும்பில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரிப்பு