உள்நாடு

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து  மாவட்ட பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரின் உதவியுடன் முற்றுகை இடப்பட்டுள்ளது.
குறித்த முற்றுகையில் பருத்தித்துறை மற்றும் நீர்வேலி பிரதேசங்களை சேர்ந்த பெண்களும் ஆண் ஒருவர் உள்ளடங்கலாக வீட்டின் உரிமையாளரான முதியோர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

Related posts

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்

அவசர நிலைமைகளில் ‘மொடர்னா’ வுக்கு அனுமதி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ஜீவன் தொண்டமான் எம்.பி

editor