உள்நாடு

யாழ்ப்பாண மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் தூதுவர்

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மாநகர சபையின் செயற்பாடுகள், நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வினவினார்.

அதற்கு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பிலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வரும் மாநகர சபை கட்டட பணிகள் தொடர்பிலும் ஏனைய நகர அபிவிருத்திகள் தொடர்பிலும் முதல்வர் விளக்கியுள்ளார்.

Related posts

கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

இன்றும் நாளையும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வௌியீடு – தேர்தல்கள் ஆணைக்குழு

editor

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை ஆணைக்குழு அங்கீகரிக்குமா? இன்று கூடி-முடிவு