உள்நாடு

யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை

(UTVNEWS| JAFFNA) -கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் நடந்த வைத்திய பரிசோதணையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா சிகிச்சை பிரிவில் இதுவரை 32 பேர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக் கின்றது. தற்போது சிகிச்சை பிரிவு வெறுமையாகியுள்ளது. மேலும் யாழ்.மாவட்டத்தில் ஒரு நோயாளி மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

Related posts

மேலதிக வட்டியுடன் விசேட வங்கிக் கணக்கு

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியது

மார்ச் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி