வகைப்படுத்தப்படாத

யாழில் பஸ் மோதியதில் மாணவன் பலி: பிரதேசத்தில் பதற்றம்

(UDHAYAM, COLOMBO) – யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம்இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியே பாலக்காட்டுச் சந்தியில் வைத்து துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது.

இதன்போது மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் அகிலன் என்ற மாணவனே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

இதையடுத்த அப்பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் குறித்த பஸ் வண்டியை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அப்பகுதி பெரும் கலவரமடைந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் பஸ் சாரதி தப்பியோடிய நிலையில், பொலிஸார் சாரதியை கைதுசெய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரீஸ் நாட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Enterprise Sri Lanka Exhibition commences

2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது