உள்நாடு

யாழில் நாளைய தினம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நாளையத்தினம் (10) பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவையும் இடம்பெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை (10) சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

நிறுவனமொன்றில் 70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை!

கோட்டாபய தொடர்ந்தும் சிங்கப்பூரில்..

இன்றைய தினம் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு