உள்நாடுபிராந்தியம்

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

குறித்த நபர், யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் கணக்காளராக பணிபுரிந்த வந்த நிலையில், கடந்த மூன்று மாத காலமாக தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 41 வயதான இரு பிள்ளைகளின் தந்ததையே இவ்வாறு இன்று (05) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

-பிரதீபன்

Related posts

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – பிரதமர்

கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பகுதியில் மஞ்சளுடன் ஐவர் கைது.

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு