உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன்னர், பொதுமக்கள் இணையம் அல்லது தொலைபேசி அழைப்பின் ஊடாக முன்பதிவு மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள முக்கிய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு மட்டும் இருந்த முன்பதிவு வசதி, மாவட்ட அலுவலகங்களுக்கும் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கும் செல்வதற்கு முன்னர் நேரத்தை ஒதுக்குவதற்கு இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்றார்.

மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்குள் நெரிசல், ஊழல் மற்றும் திறமையின்மைக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்ட முன்பதிவு முறை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 426 பேர் கைது

வரலாறு காணும் AstraZeneca : ஒரு இலட்சம் பேருக்கு ஏற்றம்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு