சூடான செய்திகள் 1

மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதாரத் துறைக்காக ஒதுக்க உத்தேசம்

(UTV|COLOMBO)-2020 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதார சேவைக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதுவரை ஒருபோதும் மக்களுக்குக் கிடைக்காத சுகாதாரத்துறை சார்ந்த சலுகைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ளன.

புதிய வரி சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் நிதியை சரியாக முகாமைப்படுத்தி மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது 18 சதவீதமாக உள்ள நேரடி வரியை 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்கும் 82 சதவீதமாக உள்ள மறைமுக வரியை 60 சதவீதம் வரைகுறைப்பதற்கும் புதிய வருமான வரி சட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

புதிய வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டுமாதங்களுக்குள் புதிதாக 69 ஆயிரம் வரி கோப்புக்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை 4 இலட்சம்வரிக் கோப்புக்களே காணப்பட்டன. புதிய வரி சட்டம் அமுல்படுத்த பட்டிருப்பதை தொடர்ந்து 30 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

உரிய முறையில் தமது பொறுப்புக்களை விளங்கிக் கொண்டு வரி செலுத்தினால் மக்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – மேலும்  23 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு