உள்நாடு

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது- சாகர காரியவசம்

(UTV | கொழும்பு) –  மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது- சாகர காரியவசம்

(SLPP ) மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என (SLPP) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனநாயகம் மற்றும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுஜன பெரமுன மாறுப்பட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிடும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. ஆகவே மக்களுக்கு மாற்று வழியேதும் கிடையாது.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிழக்கு ஆளுநரை எச்சரித்த நசீரை கண்டித்த முஸ்லிம் அமைப்பு

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

தடுப்பு முகாம்களில் இருந்து 223 பேர் வீட்டுக்கு