உலகம்

மைதானத்திற்கு ஹெலியில் வந்திறங்கிய டேவிட் வோர்னர்!

(UTV | கொழும்பு) –

டேவிட் வோனர் ஹெலிகொப்டரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் தற்போது 2024 ஆடவர் பிக்பேஷ் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. அதில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக டேவிட் வோர்னர் விளையாடி வருகிறார்.

அத்தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக ஹண்டர் பள்ளத்தாக்கில் உள்ள தன்னுடைய சகோதரர் திருமணத்திற்கு டேவிட் வோர்னர் சென்றார். அந்த விழாவுக்கு சென்ற வோர்னர் மாலை 5 மணிக்குள் முதல் போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

அதனால் திருமணத்தை முடித்துக் கொண்டு உடனடியாக ஒரு ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுத்த வோர்னர் அங்கிருந்து பறந்து தாம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி விடைபெற்ற சிட்னி மைதானத்தில் இறங்கினார். அவர் தரை இறங்கியது அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் இதர வீரர்களை வியப்பில் ஆழ்த்தியது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காசெம் சுலேமானீ கொலையினை பென்டகன் உறுதிப்படுத்தியது

“சந்திரயான் – 3 உடன் பங்குதாரர்களாக இருப்பதில் பெருமையடைகின்றோம்” – கமலா ஹாரிஸ்

‘OMICRON’ – ஃபைஸர், பயோஎன்டெக் கைவிரிப்பு